Home One Line P2 வேலூரில் தொடர்ந்து 2 நாட்களாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

வேலூரில் தொடர்ந்து 2 நாட்களாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

1364
0
SHARE
Ad

சென்னை: திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக இரண்டாவது நாளாக கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்துள்ளார்

அண்மையில்தான் திமுகவின் அடுத்த தலைவர் என்ற அளவுக்கு முன்னுக்கு நிறுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மட்டும் நேரடியாக பிரச்சாரக் களத்தில் காணப்படாத நிலை இருந்தது, ஆயினும், தற்போது அவர் தொடர்ந்து களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

உதயநிதி ஒதுங்கி இருந்ததற்குக் காரணம், அவரது இளைஞர் அணிச் செயலாளர் நியமனத்திற்குப் பின்னர் சமூக ஊடங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அவரைப் போட்டுக் காய்ச்சி எடுத்ததுதான் என்று கூறப்படுகிறது. ஸ்டாலினின் மதிப்பையே இந்த நியமனம் குலைத்தது என்பதோடு, திமுக குடும்பக் கட்சிதான் என்பதை மறு உறுதிப்படுத்தியது இந்த நியமனம்.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்ததற்கு மிக்க நன்றி. மக்களவைத் தேர்தலின் போது தமிழகம் முழுக்க நான் திமுக சார்பில் பிரசாரம் செய்தேன். அப்போது வேலூர் தொகுதியில் இருந்துதான் நான் முதன் முதலாக பிரசாரத்தைத் தொடங்கினேன். இப்போது கட்சியின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் பிரசாரக் கூட்டமும் இதுவே.” என்று உதயநிதி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் தொகுதியின் தேர்தல், திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடக்க இருக்கும் வேலூர் தேர்தலில், திமுக, அதிமுக சார்பில் தேர்தல் இரத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களான கதிர் ஆனந்த் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளனர்.