Home கலை உலகம் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக உருப்பெறும் சூரி!

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக உருப்பெறும் சூரி!

848
0
SHARE
Ad

சென்னை: ஆர்எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது, முதல் முறையாக நகைச்சுவைக் களத்தை கையில் எடுத்து இயக்க இருக்கிறார்

#TamilSchoolmychoice

இப்படம் குடும்பமாக அனைவரும் இரசித்து பார்க்கும்படி நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.