Home One Line P1 “நான் பதவி விலகும்போது, அன்வார் பிரதமராக பதவி ஏற்பார்!”- மகாதீர்

“நான் பதவி விலகும்போது, அன்வார் பிரதமராக பதவி ஏற்பார்!”- மகாதீர்

949
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் நாட்டின் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கான தனது உடன்பாட்டை இரத்து செய்ய மாட்டேன் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது சபதமாகக் கூறியுள்ளார்.

துருக்கிய அனைத்துலக செய்தி நிறுவனத்தினுடன் பேசிய போது பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி மற்றும் பிரதமர் பதவி மாற்றம் குறித்து வினவப்பட்டபோது அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

நான் எனது சொந்த வாக்குறுதியை எதிர்த்து நடக்கப்போவதில்லை. என்ன நடந்தாலும் நான் அளித்த வாக்குறுதியை கடைப்பிடிப்பேன்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நான் பதவி விலகும்போது, அவர் என்னிடமிருந்து பிரதமராக பொறுப்பேற்பார் என்று நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டார்.