Home One Line P1 “பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டை ஆளுவதில் கவனம் செலுத்த வேண்டும்!”- பிஎஸ்எம்

“பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டை ஆளுவதில் கவனம் செலுத்த வேண்டும்!”- பிஎஸ்எம்

885
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி தொடர்பாக பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்குள் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் நாட்டை ஆளுவதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது குறித்தும் பிஎஸ்எம் கட்சி விமர்சித்துள்ளது.

இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அதன் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், ஹாராப்பான் தலைமைத்துவம் இந்த முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதன் உறுப்பினர்களிடையே சில ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும்என்று வலியுறுத்தினார்.

ஒதுவேளை அவ்வாறு செய்ய முடியாவிட்டால், ஹாராப்பான் கூட்டணிக்குள் தலைவர் தேர்தல் பாணியிலான தேர்தலையும் நடத்தலாம், இதனால் பிரதமர் யார் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதிர் முகமட் முழு காலத்திற்கு பிரதமராக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆதரித்து சிலாங்கூரில் உள்ள பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துக்கு அருட்செல்வன் இவ்வாறு பதிலளித்தார்.