Home One Line P1 “பல இனங்கள் வாழும் மலேசியாவில் ஜாகிர் நாயக் இருப்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது!”- பிரதமர்

“பல இனங்கள் வாழும் மலேசியாவில் ஜாகிர் நாயக் இருப்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது!”- பிரதமர்

2156
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய முஸ்லீம் போதகர் ஜாகிர் நாயக் தொடர்பான விவகாரத்தில் மலேசியா ஓர் இக்கட்டான நிலையில் இருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

துருக்கிய அனைத்துலக செய்தி நிறுவனத்தினுடனான பேட்டியில், மலேசியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த அமைப்பைப் பற்றி கருத்துரைத்த பிரதமர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போதகர் இந்த பல்வேறு சமூகத்திற்கு எவ்வாறு ஒரு பிரச்சனை ஏற்படுத்தி உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவில் பல இனம் மற்றும் பன்முக மக்கள் வாழ்கிறார்கள். இன உறவுகள் மற்றும் பிற மதங்களைப் பற்றி தீவிர கருத்துக்களை வெளிப்படுத்தும் எவரையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே அந்த காரணத்திற்காக நாங்கள் அவரை வைத்திருக்க முடியாது. ஆனால், மறுபுறம் அவரை வேறு எங்கும் அனுப்புவது கடினம், ஏனென்றால் பல நாடுகள் அவரை வைத்திருக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜாகீரை ஒரு தீவிரவாதி என்று இந்தியா வர்ணிப்பதும், அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகள் அவரை வெறுக்கத்தக்க பேச்சாளர் என்று கருதுவதும் குறித்து பிரதமரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிடார்.

இப்போது மலேசியாவின் நிரந்தர குடியானவராக இருக்கும் ஜாகிர், பண மோசடி குற்றச்சாட்டுகளுக்காக இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வருகிறார். ஆயினும், இந்தக் குற்றச்சாட்டினை ஜாகிர் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாகீரை ஒப்படைக்குமாறு மலேசியாவிடம் இந்தியாவி கோரிக்கை வைத்ததை வெளியுறவு துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா கடந்த ஜூன் 28-ஆம் தேதியன்று உறுதிப்படுத்தினார்.

தனக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை அனைத்துலக காவல் துறை வழங்க மறுத்தது, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்ததாக நேற்று செவ்வாய்க்கிழமை ஜாகிர் கூறியிருந்தார்.