Home One Line P1 “இந்தியா- மலேசியாவுக்கான இருதரப்பு வணிகம் மேலோங்கும்!”- தெரெசா கொக்

“இந்தியா- மலேசியாவுக்கான இருதரப்பு வணிகம் மேலோங்கும்!”- தெரெசா கொக்

943
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதுடெல்லி மற்றும் புத்ராஜெயா இடையிலான  வணிக உறவை வலுப்படுத்துவதற்காக மூலத் தொழில்துறை அமைச்சர் தெரெசா கோக் ஐந்து நாள் பணி நிமித்தமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஐந்து நாள் வருகையானது, செம்பனை எண்ணெய் மற்றும் ரப்பர் வணிகம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதோடு சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவும் மலேசியாவும் நீண்டகாலமாக வேரூன்றிய வரலாற்று மற்றும் கலாச்சார பொதுவான தன்மையையும், நல்ல உறவையும் பகிர்ந்து கொள்கின்றன. இது காலப்போக்கில் நமது நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளுக்கான நிலப்பரப்பை உருவாக்கி உதவியதுஎன்று அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2018-ஆம் ஆண்டில், செம்பனை எண்ணெய் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகளை 6.84 பில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த தேசிய செம்பனை எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் 10.1 விழுக்காடு இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்ந்தது.

இந்த பயணத்தின்போது, ​​மும்பையில் நடைபெறும் மலேசியா– இந்தியா செம்பனை எண்ணெய் வணிக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு (பிஓடிஎஸ்) நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார்.