Home One Line P1 தொழிலாளர்கள் நிறுவனங்களின் சொத்து, முதலாளிகள் அவர்களை பாதுகாக்க வேண்டும்!- பெர்கெசோ

தொழிலாளர்கள் நிறுவனங்களின் சொத்து, முதலாளிகள் அவர்களை பாதுகாக்க வேண்டும்!- பெர்கெசோ

660
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்கள் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பெர்கெசோ தலைமை நிருவாக அதிகாரி டாக்டர் முகமட் அஸ்மான் அஜீஸ் முகமட் தெரிவித்தார்.

பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் போதும், வேலை முடிந்து வீடு திரும்பும் போது இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன.

இது சம்பந்தமாக, வேலைக்கு செல்லும் அல்லது வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது முதலாளியின் பொறுப்பாக இருப்பதால், வேலைக்குச் செல்லும் போதும், செல்லும் வழியிலும் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பெர்கெசோ முதலாளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

தொழிலாளர்கள் நிறுவனங்களின் ஒரு சொத்து. பணி நேரங்களில் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்லும் அல்லது வேலை வரும் வேளையில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் முகமட் அஸ்மான் கூறினார்.

தற்போது நாடு முழுவதும், தங்கள் ஊழியர்களிடையே அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களை பதிவு செய்த நிறுவனங்களை பெர்கெசோ அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள், விவேகமான ஓட்டுநர் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட அணுகுமுறைகளைத் தொடங்கலாம். விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த பிரச்சாரங்கள் மூலம் விபத்து அபாயங்கள் குறித்து காவல் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) உடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

அதே சமயம், வாகனம் ஓட்டும் போது தொழிலாளர் வர்க்கம் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், விபத்து ஏற்பட்டால் குடும்பத்தின் நிலையை சிந்தித்துப் பார்க்கவும் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு 72,631 தொழிலாளர்கள் சம்பந்தமான விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு சாலையில் நிகழ்ந்தவையாகும்.