Home One Line P1 “காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும்தான், அதற்காக உயிரையே கொடுப்போம்!”- அமித் ஷா

“காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும்தான், அதற்காக உயிரையே கொடுப்போம்!”- அமித் ஷா

890
0
SHARE
Ad

புது டில்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்து சட்டம் 370-ஐ இரத்து செய்ததோடில்லாமல், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்தார்

இதனைத் தொடர்ந்து, கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று செவ்வாய்க்கிழமை கூடியதுஇந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் தொடங்கிய நிலையில், அதற்கு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர்

சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது அரசியல் நகர்வு அல்ல, ஒட்டு மொத்த நாட்டிற்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜம்முகாஷ்மீர் அரசியலமைப்பு ஆகிய இரண்டும் இதைச் செய்ய அனுமதிக்கின்றன.” என்று அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசினார்.

#TamilSchoolmychoice

நாங்கள் ஜம்முகாஷ்மீர் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் அடங்கும் என்பதை நான் முற்றிலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயார்என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், காஷ்மீரில் நிலைமை மேலும் பதற்ற நிலைக்குத் தள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.