கோலாலம்பூர்: பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு கடன் வழங்க பெர்கெசோவிடமிருந்து மூன்று பில்லியன் ரிங்கிட் கடனை 1எம்டிபி விண்ணப்பிக்க நஜிப் ரசாக் ஒப்புக் கொண்டதாக உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1எம்டிபியின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி ஷாஹ்ரொல் அஸ்ரால் இப்ராகிம் ஹால்மி, தனது சாட்சிக் கூற்றைப் படிக்கும் போது, ஆயினும் அது குறித்து அந்நேரத்தில் நஜிப்புடன் ஒருபோதும் விவாதிக்கவில்லை என்று கூறினார்.
பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு 1எம்டிபி, 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் கொடுக்க நஜிப் ஒப்புக் கொண்டார். ஆயினும், அது பெர்கெசோவிடமிருந்து பெற இருந்த மூன்று பில்லியன் கடனைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.
1எம்டிபி நிதியில் 2.3 பில்லியனைப் பெறுவதற்கு தனது நிலையைப் பயன்படுத்தியதற்கான நான்கு வழக்குகளையும், அதே தொகையை உள்ளடக்கிய 21 பணமோசடி வழக்குகளையும் எதிர்கொள்கிறார்.