நியூயார்க்: மலேசியாவில் சீன சமூகத்தை விட இன்னும் பின்தங்கியுள்ள மலாய்க்காரர்களுக்கு நலிந்தோருக்கான நலநோக்குப் பணி மூலமாக முறையான உதவிகள கிடைக்கவில்லை என்று சொல்வது தவறானது பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
பலர் இந்த நடவடிக்கைகள் மூலமாக பலன் அடைந்துள்ளதாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உலகத் தலைவர்கள் மன்றத்தில் மேடையில் பிரதமர் கூறினார்.
மருத்துவத் தொழிலில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக, இப்போது அதிகமான மலாய் மருத்துவர்கள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“மற்ற தொழில்களிலும் நாங்கள் சில திருத்தங்களைச் செய்துள்ளோம். அது திருப்திகரமாக இல்லை, ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் சில திருத்தங்களைச் செய்துள்ளோம். இப்போது மலாய்க்காரர்கள் வணிகத்திலும் சிறப்பாக செயல்படுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.