Home One Line P1 3 ஆண்டுகளில் 606.51 மில்லியன் பெற்று, செலவிட்ட நஜிப்!

3 ஆண்டுகளில் 606.51 மில்லியன் பெற்று, செலவிட்ட நஜிப்!

642
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மொத்தமாக 606.51 மில்லியன் ரிங்கிட் பணத்தை தனது மூன்று அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் பெற்று செலவிட்டதாக முன்னாள் அம்பேங்க் தகவல் தொடர்பு மேலாளர் ஜோஹானா யூ ஜிங் பிங்  தெரிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதி சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் வழக்கு விசாரணையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 2013 மற்றும் 2015-க்கு இடையில் குற்றம் சாட்டப்பட்டவர் பயன்படுத்திய பணத்தின் அளவு குறித்து துணை அரசு வழக்கறிஞர் மறு ஆய்வு செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வங்கி ஆவணங்களின்படி, வரவு வைக்கப்பட்ட சரியான தொகை 606,510,434.66 ரிங்கிட் ஆகும்.

2112022011-898, 2112022011-906 மற்றும் 2112022011-880 ஆகிய மூன்று வங்கிக் கணக்குகளில் அப்பணம் செலுத்தப்பட்டு செலவிடப்பட்டதாக அவர் கூறினார்.

இதே காலகட்டத்தில் நஜிப் மொத்தமாக 212,367,697.57 ரிங்கிட் வெளிநாட்டு பணத்தை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.