Home One Line P1 ஐபிசிஎம்சி நிறுவப்படுவதற்கு முன்பதாக மாற்றங்கள் செய்யப்படலாம்!

ஐபிசிஎம்சி நிறுவப்படுவதற்கு முன்பதாக மாற்றங்கள் செய்யப்படலாம்!

655
0
SHARE
Ad

கோலாலம்பூர்காவல் துறைப் புகார்கள் மற்றும் காவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) நிறுவப்படும் மசோதா குறித்த விவகாரத்தில் இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்கு முன்னதாக மாற்றங்கள் செய்யப்படலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்தார்.  

முன்னதாக, காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் இந்த ஆணையம் அமைக்கப்படும் எனும் தவறான கண்ணோட்டம் காவல் அதிகாரிகள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு காவல் அதிகாரிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து ஆட்சி முறைநேர்மை மற்றும் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு நல்லமுறையில் காவல் அதிகாரிகளுக்கு இதன் நோக்கத்தையும், செயல்பாட்டையும் எடுத்துரைத்ததற்குப் பின்பு காவல் துறை அதிகாரிகள் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கினர்.

#TamilSchoolmychoice

சுஹாகாம், வழக்கறிஞர் மன்றம், மற்றும் பல அரசு சாரா அமைப்புகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு லியூ இன்று செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

ஐபிசிஎம்சி மசோதாவிலிருந்து பிரதமரின் அதிகாரத்தை பறித்து, அவ்வமைப்பின் தலைவர்களுக்கே முடிவுகளை தீர்மானிக்க ஆணையத்திற்கு அனுமதி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை அவர்கள்  முன் வைத்துள்ளனர்.என்று அவர் கூறினார்.

வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்க இருக்கும் மக்களவை அமர்வின் முதல் வாரத்தில் ஐபிசிஎம்சி மசோதா குறித்து, அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்களுக்கு அட்டவணை இடப்பட்டுள்ளது.

அடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காவல் துறையினரின் கருத்துக்களுக்காக அவர்களை சந்திக்க உள்ளதாக லிவ் கூறினார்.