Home One Line P1 ‘காட்’ அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும், கல்வி அமைச்சு உறுதி!

‘காட்’ அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும், கல்வி அமைச்சு உறுதி!

1209
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு தொடங்கி சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தேசிய மொழி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜாவி எழுத்தழகியல், போதிக்கப்படும் என்று புத்ராஜெயா மீண்டும் உறுதியாகக் கூறி உள்ளது.

அதன் அமைச்சர், மஸ்லீ மாலிக் கூறுகையில், காட் ஒரு செயல்பாடாக மட்டுமே இருக்கும், ஆனால் அது ஒரு பாடமாக இல்லாமல், பாடப்புத்தகத்தின் மூன்று பக்கங்களில் மட்டுமே இடம்பெறும் என்று கூறினார்.

அதை எவ்வாறு ஆசிரியர்கள் கற்பிக்க விரும்புகிறார்கள் என்பதை ஆசிரியர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

காட் பாடம் அமல்படுத்தப்படும், ஆனால் தேர்வுகள் அல்லது சோதனைகளில் சேர்க்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காட் தொடர்பான அமைச்சரவை முடிவின் மூலம், இந்த பிரச்சனை இனி எழுப்பப்படாது என்றும் தவறான புரிதலை உருவாக்காது என்றும் நாங்கள் நம்புகிறோம்.” என்று அமைச்சர் கூறினார்.

காட் பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை சீன மற்றும் தமிழ் சார்ந்த குழுக்கள் உட்பட சிலரின் எதிர்ப்பை எதிர்கொண்டது.