Home One Line P1 “நோரா மீண்டும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு!”- குடும்பத்தினர்

“நோரா மீண்டும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு!”- குடும்பத்தினர்

721
0
SHARE
Ad

நீலாய்: கடந்த வார இறுதியில் நெகிரி செம்பிலான், பாண்தாயில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து காணாமல் போன அயர்லாந்து சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் பிள்ளையை மீண்டும் சந்திப்பர் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நோரா அன்னின் அத்தையான, இயாடாய்ன் அக்நிவ் கூறுகையில், மலேசிய அவசர சேவையின் உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, மேலும் நோராவின் பெற்றோர்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பதால் பொதுவில் பேசுவதற்கு தயாராக இல்லை எனக் கூறியுள்ளார்.

தற்போது, கற்றல் குறைபாடுள்ள அச்சிறுமியைத் தேடும் நடவடிக்கைக்கு 200-க்கும் மேற்பட்ட காவலர்கள், நாய்கள் மற்றும் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவரவரின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மாற்று முயற்சிகள் உள்ளிட்ட பரிந்துரைகளையும் காவல் துறையினர் ஏற்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.