Home One Line P1 “புதிய பாதையில் இனி காஷ்மீர் பயணிக்கும்!”- நரேந்திர மோடி

“புதிய பாதையில் இனி காஷ்மீர் பயணிக்கும்!”- நரேந்திர மோடி

892
0
SHARE
Ad

புது டில்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீரில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும் எனவும், அந்த உரிமைகள் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரிவினைவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவைகளில் இருந்து ஜம்மு காஷ்மீரை நாம்தான் காப்பாற்ற வேண்டும். யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவுதான். நிலைமை சரியாக வரும் போது மாநில அந்தஸ்தை காஷ்மீர் பெறும். விரைவில் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்.” என்று மோடி கூறியுள்ளார். 

#TamilSchoolmychoice

காஷ்மீரில் இனி வேலை வாய்ப்புகள் பெருகுவதோடு, காஷ்மீர் மற்றும் லடாக்கை உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். 

திரைப்பட படக்காட்சிகளை எடுப்பதற்கான தடை காஷ்மீரில் இனி நீக்கப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட எல்லா மொழி தயாரிப்பாளர்கள் காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும்.” என்று மோடி கோரிக்கை விடுத்தார். 

தீவிரவாதத்தை வென்று காஷ்மீர் மக்கள் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டிய காரணத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார். முன்னதாக, நேற்றிரவு வியாழக்கிழமை பிரதமர் மோடி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.