Home One Line P1 வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

1701
0
SHARE
Ad

சென்னை: விறுவிறுப்பாக நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.

காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிகையின் போது, முதலிலிருந்தே அதிமுகவைச் சேர்ந்த ஏசி சண்முகம் முன்னனியில் இருக்க, அவர் இத்தொகுதியில் வெற்றிப் பெருவார் எனும் ஊகமும் பரவலாக பரவத் தொடங்கிற்று.

ஆயினும், இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திடீரென அதிமுக வேட்பாளரை முந்திச் சென்று முன்னனியில் இடம் பெற்றார். தொடர்ந்து வாக்குகள் கூடக் குறைய திமுக முன்னிலையில் இருந்து வந்தது.

#TamilSchoolmychoice

வாக்கு எண்ணிக்கையின் இறுதி கட்டத்தில், திமுக வெற்றி முகத்தில் இருந்து வந்ததால், அக்கட்சி தொண்டர்கள் சென்னை அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

எண்ணிக்கைகள் முடிவுற்ற நிலையில், திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த் 485,340 வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் 477,199 வாக்குகள் பெற்றார். சுமார் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. இதனிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தம் 71.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.