பெல்கிறேட்: முன்னாள் தாய்லாந்து பிரதமர் இங்லக் ஷினாவத்ராவுக்கு செர்பியா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, அனடோலு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஓர் அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செர்பிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அரசாங்கம் அவரது குடியுரிமையை வழங்கியது, செர்பியாவின் தனிபட்ட விருப்பமாக இருக்கலாம் என்று தன்ஜுக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஷினாவத்ரா இப்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் தாய்லாந்தை விட்டு வெளியேறிய பின்னர் பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது சகோதரர், முன்னாள் பிரதமர் தாக்சின் ஷினாவத்ரா, மாண்டினீக்ரோவில் குடியுரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.