Home One Line P1 சென்னை கம்பன் விழாவில் சரவணன் உரை

சென்னை கம்பன் விழாவில் சரவணன் உரை

2318
0
SHARE
Ad

சென்னை – கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 45-வது ஆண்டு கம்பன் விழாவில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பான இலக்கிய உரையைய வழங்கியதோடு, கம்பன் விழா தொடர்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

தமிழ் மொழி, இலக்கியம் குறித்து மக்களைக் கவரும் விதமான சிறப்பாக உரையாற்றக் கூடிய மலேசிய அரசியல்வாதிகளில் சரவணன் தனித்து நிற்பதால், தமிழகத்திலும், புதுவையிலும் நடைபெறும் இலக்கிய விழாக்களில் பங்கு கொள்ளவும், உரையாற்றவும் அவர் அடிக்கடி அழைக்கப்படுகிறார்.

அந்த வகையில் பழம் பெரும் படத் தயாரிப்பாளரும், சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியவரும், எம்ஜிஆரின் நெருக்கமான முன்னாள் அமைச்சராக இருந்தவருமான ஆர்.எம்.வீரப்பனைத் தலைவராகக் கொண்ட சென்னை கம்பன் கழகம் நடத்திய 45-வது கம்பன் விழாவில் சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் எழுதிய ஏவிஎம் அறக்கட்டளை சொற்பொழிவு நூலான “கம்பனின் பிரமாணங்கள்” என்ற நூல் மற்றும் ஒலிப் பேழையையும் இதே நிகழ்ச்சியில் சரவணன் வெளியிட்டார்.முதல் நூலையும், முதல் ஒலிப் பேழையையும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார்.

சென்னை 45-வது ஆண்டு கம்பன் விழாவின் படக்காட்சிகள் சில: