Home One Line P1 சீனா, மியன்மார் நாடுகளில் ஜோ லோ, நிக் பைசால் ஒளிந்திருக்கலாம்!

சீனா, மியன்மார் நாடுகளில் ஜோ லோ, நிக் பைசால் ஒளிந்திருக்கலாம்!

615
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரமாகத் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி நிக் பைசால் அரிப் சீனா (குறிப்பாக, ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகள்), தாய்லாந்து, இந்தோனேசியா, மியான்மரில் அடைக்களம் புகுந்து இருக்கலாம் என்று ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி ரொஸ்லி ஹுசைன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

தப்பியோடிய இருவருக்கும் சிவப்பு அறிவிப்பு வெளியிடுமாறு அனைத்துலக குற்றவியல் காவல் அமைப்பிடம் (இன்டர்போல்) எம்ஏசிசி கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இன்டர்போல் இந்த அறிவிப்பை அனுப்பியதாக ரோஸ்லி கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு ஜூலை 25 மற்றும் ஜூன் 14-ஆம் தேதிகளில் நிக் பைசால் மற்றும் ஜோ லோவின் கடப்பிதழ்களை மலேசிய அரசாங்கம் இரத்து செய்தது என்று அவர் மேலும் கூறினார்.