நீலாய்: பத்தாவது நாளாக அயர்லாந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கைக் குழு பெரும்புன் மலைப் பகுதியில் மனித எச்சத்தைக் கண்டு தடுமாறிப் போனதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எச்சம் யாருடையது என்று தெளிவாகக் குறிப்பிடாத காவல் துறை, தற்போது அது வெண்ணிற தோல் கொண்ட ஒரு பெண்ணின் சடலம் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
அச்சடலம், அச்சிறுமி காணாமல் போன தங்கும் விடுதியிலிருந்து 2 கிமீ தூரத்தில் கண்டெடுக்கப்பட்டதுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி சிரம்பானின் பாந்தாயில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து கற்றல் குறைபாடுகள் உடைய நோரா அன் எனும் 15 வயது அயர்லாந்து சிறுமி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
நேற்று திங்கட்கிழமை, நோராவைக் கண்டு பிடித்து தகவல் தருபவர்களுக்கு 50,000 ரிங்கிட் அன்பளிப்பாக வழங்க உள்ளதாக அவரது தாயார் குறிப்பிட்டிருந்தார்.