Home One Line P1 ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது!

ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது!

777
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது.

ஹாங்காங்கின் பிரச்சனையை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்து செல்ல அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களுக்கும், கலவரப் படைக்கும் இடையே நடந்த மோதலால் ஹாங்காங் விமான நிலையத்தில் இரவு முழுவதும் குழப்பம் நிலவியது.

காவல் நடவடிக்கைக்கு பின் விமான நிலையத்திலிருந்து போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இப்போராட்டத்தால் பல நூறு பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். வெளிநாட்டவரும் வேறு வழியில்லாமல் போரட்டக்காரர்களுடன் தங்களின் நிலைமை எடுத்துக் கூறி வாதிட்டார்கள்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று அதன் நிருவாகம் தெரிவித்தது. பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை விமானங்களை நிறுத்த கட்டாயப்படுத்தியதாக சீனா அரசு குறிப்பிட்டிருந்தது.

திங்களன்று விமான சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களே காரணம் என்று விமானம் நிலையம் குற்றம் சாட்டியது.

விமான நிலையம் செயல்படத் தொடங்கிய சில மணி நேரங்களில் மீண்டும் போராட்டக்காரர்கள் அத்துமீறி விமான நிலையத்தின் உள் நுழைந்து தங்களின் ஆர்பாட்டத்தைத் தொடர்ந்தனர். பயணிகள் எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற விமான நிலையம் அறிவிப்புச் செய்தது.  அடுத்தக்கட்டமாக என்ன நடக்கும் என்ற சூழலில் ஹாங்காங் உள்ளது.