Home One Line P1 “காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே!”- இம்ரான் கான்

“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே!”- இம்ரான் கான்

721
0
SHARE
Ad

காஷ்மீர்: இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ஆட்சிக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோடி மாபெரும் தவற்றை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சாடியுள்ளார்.

நான் நரேந்திர மோடிக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாகிஸ்தானுக்கு உட்பட்ட காஷ்மீரில் இந்திய இராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு அதிகமாக பதிலடி தருவோம்,” என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது காஷ்மீருக்கு மோடி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.