சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை கூறுகையில், “டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்திற்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆயினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த யானையின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை.