கோலாலம்பூர்: வழக்கறிஞரான ஷாரெட்சான் ஜோஹானின் தலையைத் துண்டித்து, கொலை செய்வதாக அச்சுறுத்திய நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பிரிவு 506-இன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
காவல் துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு ஷாரெட்சான் தமது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஜாகிர் நாயக்கின் நிரந்தர குடியுரிமையை திரும்பப் பெறுமாறு கோரிய பின்னர் புதன்கிழமை இரவு ஷாரெட்சான் இந்த அச்சுறுத்தலைப் பெற்றார்.