Home One Line P1 கெடா: 22 தமிழ் பள்ளிகள் அரேபிய வனப்பெழுத்து பாடத்திற்கு ஆதரவு!

கெடா: 22 தமிழ் பள்ளிகள் அரேபிய வனப்பெழுத்து பாடத்திற்கு ஆதரவு!

1048
0
SHARE
Ad

சுங்கை பட்டாணி: கோலா முடா யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் 22 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தொடக்கப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்தை அறிமுகப்படுத்தும் கல்வி அமைச்சின் முயற்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.

அரேபிய வனப்பெழுத்தை கற்றுக்கொள்வது இளைய தலைமுறையினரின் அறிவுக்கு வளர்ச்சியைத் தருவதோடு, மக்களுடன் நல்ல உறவை வளர்க்க முடியும் என்றும் அவர்கள் நம்புவதாக உத்துசான் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நாங்கள் ஒன்றாக கலந்துரையாடி, இந்த அரேபிய வனப்பெழுத்து இளம் தலைமுறையினருக்காக பள்ளிகளில் அறிமுகப்படுத்த ஒப்புக் கொண்டோம்என்று தமிழ் அறவாரியத்தின் கெடா மாநிலத் தலைவர் ஜி.குமரன் கூறினார்.

சுங்கை பட்டாணியில் உள்ள தமிழ் அறவாரிய அலுவலகத்தில் நேற்று இரு மாவட்டங்களின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்  தலைவர்களுடனான சந்திப்புக்கு தலைமை தாங்கிய பின்னர் குமரன் இதனை தெரிவித்தார்.

அனைத்து பள்ளி நிருவாகங்களும் கல்வி அமைச்சின் விருப்பத்திற்கு ஒரு மனதாக ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.

போதுமான தகவல்கள் இல்லாததால் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை அறிமுகப்படுத்துவதை இந்தியர்கள் எதிர்ப்பதாக குமரன் தெரிவித்தார்.