Home One Line P2 பிக் பாஸ் 3 : அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் 3 : அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

1234
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்திலிருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அபிராமி, கவின், முகேன், லோஸ்லியா, மதுமிதா ஆகியோரே  அந்த ஐவராவார்.

சனிக்கிழமை நிகழ்ச்சியில் தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதால் விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதாவை பிக்பாஸ் வெளியேற்றியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் உரையாற்றிய கமல்ஹாசன், ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணை முதலில் காப்பாற்றலாம் என்று கூறினார். அதன் பின்னர் கவினும், லோஸ்லியாவும் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களில் எஞ்சியிருந்தவர்கள் மலேசியாவின் முகேனும், அபிராமியும்தான். அவர்கள் இருவரில் அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

அதன் பின்னர் கமல் அபிராமியை மேடைக்கு அழைத்து அவருடன் கலந்துரையாடினார்.

பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய அபிராமியை வாழ்த்திய இயக்குநர் சேரன் “அபிராமி இனி உங்களின் பார்வை நேர்கொண்ட பார்வையாக இருக்கட்டும்” என வாழ்த்தினார்.

அண்மையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மூன்று பெண்களில் ஒருவராக அபிராமி சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

-செல்லியல் தொகுப்பு