கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமி மற்றும் மூன்று பேரை மன்னிப்பு கேட்டு 48 மணி நேரத்திற்குள் ஒரு நியாயமான தீர்வுத் தொகையை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில் அவர்கள் மீது அவதூறு வழக்கைத் தொடர உள்ளதாகவும் கூறி கடிதத்தை அனுப்பி உள்ளார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகிய மூவருக்கும் அவர் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த வாரம், இதே போன்ற கோரிக்கையை மனி தவள அமைச்சர் எம்.குலசேகரன் மீது தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு பதிலளித்த குலசேகரன் ஜாகிரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தண்டனைச் சட்டம் மற்றும் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜாகிர் ஐந்து பேருக்கு எதிராக கவல் துறையில் புகார் அளித்துள்ளார்.