கோலாலம்பூர்: ஜாகிர் நாயக் மலாக்கா மாநிலத்தில் மத சொற்பொழிவுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதன் முதலமைச்சர் அட்லி சஹாரி டி ஸ்டார் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
இன உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு பிரச்சனையையும் மாநில அரசு தவிர்க்கும் என்று அட்லி நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
“நாங்கள் இன ஒற்றுமையை பராமரிக்க விரும்புகிறோம். எனவே, ஜாகிர் இங்கு பேசுவதற்கு அல்லது கூட்டங்களை நடத்த அனுமதிக்கபட மாட்டார் என்று நாங்கள் முடிவு செய்தோம்” என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைக்கு, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் பேசுவதற்கு மலாக்கா, ஜோகூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சரவாக் ஆகிய ஏழு மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.