Home One Line P1 ஊழல் குற்றங்களுக்காக கைதானவர்களில் அரசு ஊழியர்களே அதிகம்!- எம்ஏசிசி

ஊழல் குற்றங்களுக்காக கைதானவர்களில் அரசு ஊழியர்களே அதிகம்!- எம்ஏசிசி

762
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊழல் குற்றங்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் அரசு ஊழியர்கள் என்பதை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா வருத்தத்துடன் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் வரையிலும், எம்ஏசிசியின் கண்டுபிடிப்புகளின்படி, ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 4,860 நபர்களில் 46.3 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் என்று அவர் குறிப்பிட்டார். அவர்களில், கைதிகளில் பாதி பேர் 40 வயதுக்கும் கீழ்பட்டவர்கள்என்று அவர் தெரிவித்தார்.

எம்ஏசிசியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 22.1 விழுகாடு அரசு ஊழியர்கள், அவர்கள் அலுவலகத்தில் அதிகாரம் அல்லது பதவியில் இருந்தால் ஊழலை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். அரசு ஊழியர்களிடையே இது திருத்தப்பட வேண்டிய ஒன்றுஎன்று அவர் கூறினார்.