Home One Line P2 துப்பறிவாளன் 2: மீண்டும் துப்பறிய கிளம்புகிறார் விஷால்!

துப்பறிவாளன் 2: மீண்டும் துப்பறிய கிளம்புகிறார் விஷால்!

827
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம்துப்பறிவாளன்‘.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைபாடுகள் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எவ்வித அறிவிப்பும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக செய்திகள் கிடைத்திருக்கிறது.

துப்பறிவாளன் படத்தில் விஷால், ஆண்ட்ரியா, பிரன்னா, வினய், அனு இம்மானுவேல், பாக்கியராஜ், ஜான் விஜய் இன்னும் பலர் நடித்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் தற்போது இலண்டனில் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெறியவருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.