Home One Line P2 இந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்!

இந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்!

1404
0
SHARE
Ad

சென்னை: தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பில் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர் நகைச்சுவை நடிகர் விவேக்.

இவர் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நிலையில், சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலக வாழ்க்கையில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை.

இதனை பல்வேறு இடங்களில் நடிகர் விவேக் பதிவும் செய்திருக்கிறார். கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அதுவும் நிறை வேற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் கமல் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார்.