Home One Line P1 ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை!

ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை!

723
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

காவல் துறை விசாரணை முடியும் வரையிலும் அவர் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கிளந்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜாகிரின் உரைகள் மக்கள் தரப்பில் கவலைகளையும் தவறான புரிதல்களையும் எழுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

நாங்கள் உண்மைகளை கண்டுபிடிப்போம்.” என்று அவர் கூறினார்.

வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நிலைமையை எளிதாக்குவதற்கும் தற்காலிகமாக அமைதியை நிலைநிறுத்துவதற்கும் எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசியல் பிரச்சனைகள் இணைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.” என்று அவர் கூறினார்.