Home One Line P1 இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு!

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு!

661
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரோடு தொலைபேசி மூலம் உரையாடியதைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் நடுவராக இருந்து செயல்படுவது குறித்து மீண்டும் பேசியுள்ளார்.

“காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு காணும் நோக்கில் நான் உதவ தயார்” என்று டிரம்ப் கூறியுள்ளார்

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு நாடுகள் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நட்புறவுடன் இருக்கவில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அங்கு அபாயகரமான நிலைதான் உள்ளதுஎன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியுள்ளார்

#TamilSchoolmychoice

இன்னும் ஒரு சில நாட்களில் ஜி7 மாநாடு நடக்க உள்ளது. அம்மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் பேச உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்

கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் டிரம்ப், சுமார் 30 நிமிடம் தொலைபேசி மூலம் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது