Home One Line P1 “பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது!”-அனுவார் மூசா

“பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது!”-அனுவார் மூசா

772
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜசெக கட்சியுடன் கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்துள்ளார்.

ஜசெக அரசாங்கத்தில் இருந்தால் அதிக தீங்கு விளைவிக்கும். அக்கட்சியின் சித்தாந்தம் நீண்ட நாட்கள் செயல்முறைக்கு நாட்டிற்கு ஆபத்தாக முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜசெகவின் சித்தாந்தம் ​​சோசலிசத்தையும், மதச்சார்பின்மையையும் குறிப்பிடுகிறது. இது மலேசியன் மலேசியா” கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சோசலிசம் அல்லது மதச்சார்பின்மையை பெர்சாத்து கட்சி ஏற்றுக்கொள்கிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

டாக்டர் ஜாகிர் நாயக்கின் விவகாரத்தில் அவருக்கு எதிராக கருத்துரைத்த இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் போன்றோரை எதிர்ப்பார்க்க வேண்டாமென்று பிரதமருக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய போதகர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு ஆதரவாக சைட் சாதிக் அறிக்கை விடுத்தற்கு அனுவார் இவ்வாறு மேற்கோளிட்டுள்ளார்.