Home One Line P1 அரேபிய வனப்பெழுத்து பாடத்தை எதிர்த்து ஆகஸ்டு 23 எதிர்ப்பு போராட்டம்!

அரேபிய வனப்பெழுத்து பாடத்தை எதிர்த்து ஆகஸ்டு 23 எதிர்ப்பு போராட்டம்!

801
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரேபிய வனப்பெழுத்து தொடர்பாக மலாய்க்க்காரர் அல்லாதவர்களின் கவலைகளை சரிபடுத்துவதற்கு கல்வி அமைச்சு கூடுதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திய போதிலும், மலேசிய இந்திய கல்வி உருமாற்ற சங்கம் போன்ற இந்திய ஆர்வலர் குழுக்கள் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு இப்பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் நகரில் நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கும், சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் இது தொடர்பாக இரண்டு போராட்டங்கள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் எ.இளங்கோவன் அறிவித்தார்.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை அமல்படுத்துவதை கல்வி அமைச்சு நிறுத்த வேண்டும் என்று இந்திய குழுக்கள் விரும்புவதோடு மட்டுமல்லாமல், தேசிய பள்ளிகளில் அப்பாடத்தை திருத்த வேண்டும் என்றும் இளங்கோவன் கூறினார்.

தேசிய பள்ளிகள், சீன மற்றும் தமிழ் மொழி பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை செயல்படுத்தப்படுவதை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தக் கேட்டுள்ளோம். பலர் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர், ஆனால், நாங்கள் தேசியப் பள்ளிகளிலும் கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் தேசிய பள்ளிகளில் ஜாவி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.”

தேசிய மொழி பாடப்புத்தகங்களில் அரேபிய வனப்பெழுத்து பாடம் இடம்பெறுவதையும் இக்குழுக்கள் எதிர்க்கின்றன என்று அவர் கூறினார்.

ஆகஸ்டு 14-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஒப்புதலுடன் அரேபிய வனப்பெழுத்து பாடங்களை பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டிருந்தது.