Home One Line P2 “விஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய், கமல்ஹாசன் தீர்த்து வைக்க வேண்டும்!”- நடிகை மதுமிதா

“விஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய், கமல்ஹாசன் தீர்த்து வைக்க வேண்டும்!”- நடிகை மதுமிதா

1023
0
SHARE
Ad

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வாழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் கடந்த ஜூன் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகை மதுமிதாவும் கலந்து கொண்டார்

நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி 55 நாட்கள் இருந்த போது, பிக் பாஸ் விதிகளை மீறி நடந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். ஆயினும், அதற்கான காரணத்தை தொலைக்காட்சி நிதுவாகமும், மதுமிதா தரப்பிலும் இதுவரையிலும் கூறவில்லை

பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த தகவல்களை இரண்டு தரப்பினரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த புதன்கிழமை விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியேறிய போது நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான ரசிது கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு 11.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையான 80,000 ரூபாயுடன், 42 நாட்களுக்கான பாக்கி பணம் திருப்பித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பியுள்ள வாட்சாப் செய்தியில், நிலுவைத் தொகையை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுமிதா,  பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு தாம் எந்தவித தற்கொலை மிரட்டலும் விடவில்லை எனவும் தம்மீது விஜய் டிவி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்றும் கூறினார்

இந்த விவகாரத்தை விஜய் டிவி நிருவாகமும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனும் பேசித் தீர்வு காண வேண்டும் என்று மதுமிதா கேட்டுக் கொண்டார்.