Home One Line P1 தமிழ் நேசன்: ஊதிய நிலுவைத் தொகை விவகாரத்தில் அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும்!

தமிழ் நேசன்: ஊதிய நிலுவைத் தொகை விவகாரத்தில் அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும்!

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊதிய நிலுவைத் தொகை மற்றும் இழப்பீடு தொடர்பாக எட்டு மாதங்கள்  காத்திருந்து, 40 முன்னாள் தமிழ் நேசன் செய்தித்தாள் தொழிலாளர்கள் இந்த பிரச்சனையை தீர்க்க மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரனின் தலையீட்டைக் கோரி உள்ளனர்.

அச்செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் கே. பத்மநாபன் கூறுகையில், முன்னாள் தொழிலாளர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது இன்னமும் கிடைக்காதது குறித்து அமைச்சின் உடனடி கவனத்தைப் பெறும் என்று நம்புவதாகக் கூறினார்.

ஜனவரி 28, 2019 தேதியிட்ட கடிதத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதியத் தொகை மற்றும் இதர சலுகைளை நாங்கள் பெற வேண்டும். இந்த சிக்கல் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

#TamilSchoolmychoice

சுமார் 800 உத்துசான் மெலாயு (மலேசியா) பெர்ஹாட் ஊழியர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலரின் கவனத்தைப் பெற்றிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அவர் கூறினார்.

இங்குள்ள டாமான்சாரா ஹைட்ஸில் உள்ள டத்தோஶ்ரீ எஸ். வேள்பாரியின் அலுவலக கட்டிடத்தின் முன் 30 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் செய்தித்தாள் ஊழியர்களுடன் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் பத்மநாபன் நிருபர்களைச் சந்தித்தார்.

ஊதிய நிலுவைத் தொகை மற்றும் தொழிலாளர்களின் இழப்பீடு தவிர, பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான அனைத்து பங்களிப்புகளையும், கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளதொழிலாளர்களின்இபிஎப்தொகையின்நிலுவையையும் வேள்பாரிதீர்த்துக்கொடுக்குமாறு பத்மநாபன்கேட்டுக் கொண்டார்.

ஒரு வாரத்திற்குள் இந்த விவகாரத்தை தீர்க்க, தனது முன்னாள் ஊழியர்கள் அனைவரையும் வேள்பாரி சந்திக்க வேண்டும் என்றும், அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால் அடுத்த வெள்ளிக்கிழமை மற்றொரு போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

1924-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மிகப் பழமையான தமிழ் மொழி செய்தி நிறுவனமான தமிழ் நேசன் 96 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்பட்டது.