சென்னை: தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அவர்களின் புகைப்படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்ற ஐவரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நெற்றியில் திருநீறு அணிந்து, திலகம் இட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இவர்கள் ஆறு பேரும் கோவையில் முகாமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கோவையில் 2000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.