Home One Line P2 பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்?

பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்?

1541
0
SHARE
Ad

சென்னை – நேற்று சனிக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார் என்பதைக் கோடிகாட்டாமலேயே கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்திலிருந்து நான்கு பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி, ஆகியோரே  அந்த நால்வராவர்.

நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் கடந்த வாரத்தில் பிக் பாஸ் இல்லத்தில் அரங்கேறிய பல சம்பவங்கள் குறித்து பங்கேற்பாளர்களுடன் தனது கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட கமல்ஹாசன், இறுதியில் இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவர் யார் என்பதை நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில்) பார்ப்போம் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பெரும் சர்ச்சைக்குள்ளாகி மதுமிதா வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்தும், அதைத் தொடர்ந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சி செய்திருந்த காவல் துறை புகார் குறித்தும் கமல் எதுவும் கூறாமல் தவிர்த்து விட்டார்.

கடந்த வாரம் தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதால் விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதாவை பிக்பாஸ் வெளியேற்றியிருந்தார்.