Home One Line P1 ஜி7 குழுவில் உறுப்பியம் இல்லாவிட்டாலும், மோடிக்கு சிறப்பு அழைப்பு!

ஜி7 குழுவில் உறுப்பியம் இல்லாவிட்டாலும், மோடிக்கு சிறப்பு அழைப்பு!

848
0
SHARE
Ad

பிரான்ஸ்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை பிரான்ஸில் நடைபெறும் ஜி7 உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்தியா ஜி7 குழுவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்தினராக ஜி7 உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனிப்பட்ட முறையில் அழைத்திருக்கிறார்.

ஜி7-இன் ஒரு பகுதியாக இருக்கும் நாடுகளில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஜி7 குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ளன. இந்த அழைப்பு இரு தலைவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவின் பிரதிபலிப்பு என்றும், இந்தியாவை ஒரு பெரிய பொருளாதார சக்தியாக அங்கீகரிப்பது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு கூறியிருந்தது.

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை பியாரிட்ஸ் நரேந்திர மோடி வந்தடைந்தார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் சந்திப்பபை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.