Home One Line P1 “சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை, ஜாகிர் நாயக் உட்பட”!- மொகிதின் யாசின்

“சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை, ஜாகிர் நாயக் உட்பட”!- மொகிதின் யாசின்

769
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் யாரும் சட்டரீதியான விளைவுகள் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற மத போதகர்களும் இதில் அடங்குவதாக அமைச்சர் கூறினார்.

முஸ்லிம்கள் டாக்டர் ஜாகிரை ஒரு மரியாதைக்குரிய இஸ்லாமிய அறிஞராகக் கருதுகிறார்கள் என்பதையும், அவரைப் பாதுகாக்க கடமைப்பட்டிருப்பதாக உணருவதையும் ஒப்புக் கொண்ட அதே வேளையில், முக்கியமான விடயங்களைத் தொட்டதற்காக இன்னும் அவர் விசாரிக்கப்படுவார் என்று அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜாகிரின் கூற்றுகள் அசௌகரியத்தை ஏற்படுத்தியதை நாங்கள் அறிவோம், எனவே நீதியை உறுதிப்படுத்துவது முக்கியம். யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை.” என்றுஅவர் கூறினார்.

காவல் துறையின் விசாரணைகள் குறித்த முழு அறிக்கைக்காக காத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.