Home One Line P1 எச்சரிக்கைக்குப் பிறகும் அஸ்மின், சுரைடா, அமிருடின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!

எச்சரிக்கைக்குப் பிறகும் அஸ்மின், சுரைடா, அமிருடின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!

807
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பல தலைவர்கள் கலந்துக் கொள்ளவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார். எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, உதவித் தலைவர் சுரைடா காமாருடின், சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அமிருடின் ஷாரி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பிகேஆர் தனது மாதாந்திர கூட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தமக்கு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்று சுரைடா கூறியிருந்தார்.

இருப்பினும், அவர் இல்லாததை மிகைப்படுத்த தேவையில்லை என்று அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சுரைடா, முன்னர் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வதில் விடாமுயற்சியுடன் இருந்ததாகவும், ஆனால், தற்போது அவரது பணிச் சுமைகளால் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமின்மைக்கு வழிவகுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அமிருடின் இது குறித்து கருத்து கேட்கும்போது எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தாம் கடந்த மாதக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்று அமிருடின் கூறியிருந்தார்.

தனது துணைத் தலைவர் அஸ்மின் நேற்று கட்சியின் உயர்மட்ட தலைமைக் கூட்டத்தில் தோன்றுவார் என்று தாம் நம்பியதாக அன்வார் கூறியிருந்தார். கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு ஒரு கட்டத்தில் அஸ்மின் எவ்விதக் காரணத்தையும் கூறவில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.