Home One Line P1 “களிப்பூட்டும் கண்டுபிடிப்புகளுக்கான பூந்தோட்டம்” என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் தாய்மொழிக் கருத்தரங்கு 2019

“களிப்பூட்டும் கண்டுபிடிப்புகளுக்கான பூந்தோட்டம்” என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் தாய்மொழிக் கருத்தரங்கு 2019

985
0
SHARE
Ad
சிங்கை கல்வி அமைச்சர் ஒங் யீ கங்

சிங்கப்பூர் – தாய்மொழிகளுக்கும், தாய்மொழிக் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது சிங்கப்பூர் அரசாங்கம். அதன் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் தாய்மொழிகள் கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றது. இவ்வாண்டு “களிப்பூட்டும் கண்டுபிடிப்புகளுக்கான பூந்தோட்டம்” என்ற கருப்பொருளில்கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 24-ஆம் நாள், ‘தாய்மொழிகள் கருத்தரங்கம் 2019’ முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

சிங்கை கல்வி அமைச்சு, சீனமொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, மலாய் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுதமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் இந்தக் கருத்தரங்கம், தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நடைபெறும் கருத்தரங்கமாகும்.

வாழ்நாள் முழுவதும் தாய்மொழியைக் கற்பதற்கான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல்அதன் வழி குடும்பத்தினர்களுக்கு இடையிலான உறவு நெருக்கத்தை அதிகரித்தல், சகோதர சமூகங்களுக்கிடையே உறவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களைக் கொண்டு இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.  இதன் வழி தாய்மொழிகளைக் கற்பது, உரையாடுவது, மொழிப் பரிமாற்றங்கள் செய்வது ஆகிய அம்சங்களோடு தாய்மொழிகளுக்கு இணக்கமான ஒரு சூழலை நாட்டில் ஏற்படுத்துவதை கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் இலக்காகக் கொண்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சீனம்மலாய்தமிழ் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கருத்தரங்கில் மிகப் பெரிய கண்காட்சிக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. பல அரசாங்க அமைப்புகளும்கல்வி நிறுவனங்களும்மழலையர்தொடக்கஇடைநிலைப்பள்ளிகளும் கண்காட்சிக் கடைகளை அமைத்துமொழிசார்ந்த நடவடிக்கைளின் வழியாகவும்விளையாட்டுகளின் வழியாகவும் தாய்மொழிப் பயன்பாட்டை ஊக்குவித்தனர்.

தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுதமிழ் முரசு நாளிதழ்லீ குவான் யூ அறவாரியம்தேசிய நூலக வாரியம் முதலான அமைப்புகள் தமிழ் மொழிக் கற்றலையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் திட்டங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.

தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக்குழு கடந்த பொங்கல் அன்று வெளியிட்ட கனியும் மணியும்’ என்னும் குறுஞ்செயலியை மூன்று ஐ-பேட் கருவிகளின் வழி காட்சிக்கு வைத்திருந்தனர்முத்து நெடுமாறனும் கஸ்தூரி ராமலிங்கமும் இணைந்து உருவாக்கிய இந்தச் செயலிபலரின் கவனத்தை ஈர்த்தது.

சிங்கப்பூரில் உள்ள சன் டெக் சிட்டி மாநாட்டு வளாகத்தில் நடந்த இந்தக் கருத்தரங்கில்சிங்கப்பூரின் கல்வி அமைச்சர்  ஒங் யீ கங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைத் தொடக்கி வைத்தார். திறப்பு நிகழ்ச்சியில் சீனமலாய்தமிழ்க் குழந்தைகள் அவரவர் பண்பாட்டு உடை அணிந்து நடனங்களை வழங்கி வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.

உங்களுக்காக இதோ கருத்தரங்கின் படக்காட்சிகள்: