Home One Line P2 பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை, சர்ச்சை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு!

பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை, சர்ச்சை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு!

1234
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வணிகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், மேலும், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டிவிட்டு மறைமுக போர்களை பாகிஸ்தான் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

#TamilSchoolmychoice

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை அனைத்துலக அளவில் எடுத்துச் சென்றது. பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனாவை தவிர்த்து மற்ற எந்நாடுகளும் ஆதரவு அளிக்கவில்லை. இதனையடுத்து, பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாட் உசேன் தமது டுவிட்டர் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தியா குறித்து விவாதித்தோம். ஆப்கானுடன் வணிகம் செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் வான் வழி, நில வழிகளுக்கு தடை விதிப்பது பற்றி பேசினோம். இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்