Home One Line P1 எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் – 3 நாடுகளுக்குச் செல்கிறார்

எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் – 3 நாடுகளுக்குச் செல்கிறார்

934
0
SHARE
Ad

சென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (படம்) அதிகாரத்துவ பயணமாக இன்று தொடங்கி 3 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

துபாயில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் எடப்பாடி அதைத் தொடர்ந்து பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் தனது பயணத்தைத் தொடர்கிறார்.

பல்வேறு துறைசார்ந்த ஆய்வுப் பயணமாக அவரது பயணம் அமையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எடப்பாடி பழனிசாமியை ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் திரண்டு வந்து உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர். பலர் பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றது ஊடகங்களால் கண்டனங்களுடன் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழக முதல்வரின் பயணம் குறித்துக் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்திற்கான முதலீடுகளைப் பெருக்க அவர் வெளிநாடு செல்கிறாரா அல்லது தனது சொந்த முதலீட்டைப் பெருக்கிக் கொள்ள வெளிநாடு செல்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழியும் தமிழக முதல்வரின் பயணத்தால் எந்தவிதப் பயனும் விளையாது என சாடியுள்ளார்.