Home One Line P1 “நாட்டுப் பண் – தேசியக் கொடியை இருவிழியெனக் கொள்வோம்” – வேதமூர்த்தி

“நாட்டுப் பண் – தேசியக் கொடியை இருவிழியெனக் கொள்வோம்” – வேதமூர்த்தி

1101
0
SHARE
Ad

புத்ராஜெயா – மலேசிய மக்கள் அனைவரும் நாட்டுப் பண்ணான ‘நெகாரா கூ’ வையும் தேசியக் கொடியையும் இருவிழியெனக் கொள்வதை இவ்வாண்டு மெர்டேக்கா தின சிந்தனையாகக் கொள்வோம் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தன்னுடைய சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மலேசிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள். குறிப்பாக, ‘ஜாலூர் கெமிலாங்’ எனப்படும் தேசியக் கொடியை மதிப்பதில் மலேசியக் குடிமக்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள். அதைப்போல நாட்டுப் பண்ணையும் மதிக்கும் குடிமைப் பண்பு மலேசியரிடம் மிகுந்து காணப்பட்டாலும் சில வேளைகளில் நாட்டுப் பண் இசைக்கப்படும் வேளையில் ஒருசிலர் அமர்ந்து இருப்பதும் உரையாடுவதும் அத்தனைப் பொருத்தமானதல்ல;

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின்கீழ் இரண்டாவது முறையாக மெர்டேக்கா தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், நாட்டுப் பண்ணுக்கும் கொடிக்கும் உரிய மரியாதை செலுத்துவதை புதிய சிந்தனையாகக் கொள்வோம்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் நிலவினாலும் கண்டிப்பாக எல்லா வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையும் நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் எம்.ஏ.பி. கட்சி நிறுவனத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி 62-ஆவது சுதந்திர தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.