கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம் ஆரோக்கியமற்ற நடவடிக்கை என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் ஹலால் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த விரும்பினால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் இதுபோன்ற சர்ச்சைகள், இனப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சாரத்தை நீங்கள் ஊக்குவிக்க விரும்பினால், அது ஆரோக்கியமானதல்ல, ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அன்வர் கருத்துப்படி, முஸ்லிம்களாக, நல்ல தயாரிப்புகளை உற்பத்தி செய்வது மற்றும் முஸ்லிம்களுக்கு வசதி செய்வது முக்கியம், ஆனால் அதே நேரத்தில், இது அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.
“இருப்பினும், முஸ்லிம்களுக்குத் தேவையான பொருட்களும் உள்ளன, ஆனால் அவை சீனர்களால் தயாரிக்கப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தலாம் (ஹலால்). எனவே, இந்த பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்ட இன அர்த்தங்கள், ஒரு பன்முக சமூகத்திற்கும், தேசத்திற்கும் சரியில்லாத ஒன்று” என்று அவர் மேலும் கூறினார்.
சமீபத்தில், முஸ்லிம் அல்லாத பொருட்களைப் புறக்கணிப்பது மற்றும் முஸ்லீம் தயாரிப்புகளை ஆதரிக்கும் பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஒரு சில முஸ்லிம் மக்களால் வரவேற்புப் பெற்று வருகின்றன.