Home One Line P1 காற்பந்து போட்டி வன்முறை சம்பவத்திற்கு இந்தோனிசிய அமைச்சர் மன்னிப்புக் கோரினார்!

காற்பந்து போட்டி வன்முறை சம்பவத்திற்கு இந்தோனிசிய அமைச்சர் மன்னிப்புக் கோரினார்!

779
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே நேற்று இரவு வியாழக்கிழமை நடந்த உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது எழுந்த வன்முறை சம்பவங்களுக்கு இந்தோனிசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் இமாம் நஹ்ராவி மன்னிப்பு கோரியுள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து வெளியிட்டுள்ளார். இமாம் மன்னிப்பு கேட்கவும் வன்முறை குறித்து தனது வருத்தத்தை தெரிவிக்கவும் அவரை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நேற்றிரவு நடந்த போட்டியில்மலேசியா அணி இந்தோனிசிய அணியை 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இரு முறை இந்தோனிசிய அணியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மலேசிய அணி, மீண்டும் எழுந்து இந்தோனிசிய அணியை வெற்றிக் கொண்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து, எப்ஏஎம் பிபாவுக்கு அதிகாரப்பூர்வ புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், தாம் இந்தோனிசிய அரசாங்கத்துக்கும், அங்குள்ள விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை அளிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.