Home One Line P2 திகார் சிறையில் சிறப்பு வசதிகள் இல்லாமல் உறக்கம் இழந்த ப.சிதம்பரம்!

திகார் சிறையில் சிறப்பு வசதிகள் இல்லாமல் உறக்கம் இழந்த ப.சிதம்பரம்!

1125
0
SHARE
Ad

புது டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இரண்டு வாரத்திற்கு திகார் சிறையில் அனுமத்திக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை தனது முதல் நாள் இரவினை சிதம்பரம் அச்சிறையினில் செலவிட்டார்.  முதல் நாள் இரவு முழுவதும் அவர் அமைதியற்று இருந்ததாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

டெல்லி நீதிமன்றம் தனது ஜாமீன் மனுவை நிராகரிப்பதற்கு முன்பு கடந்த சில நாட்கள் வரை மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிதம்பரம், திகாரில் உள்ள சிறை எண் 7-இல் அடைக்கப்பட்டுள்ளார். அது அமலாக்கத்துறை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிவு செய்யப்படும் வழக்கமான கலமாகும்.

இன்று வெள்ளிக்கிழமை காலை, சிதம்பரத்திற்கு காலை 6 மணியளவில் ரொட்டி, போஹா மற்றும் கஞ்சியும், உணவுக்கு தேநீரும் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

திகார் சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் எதுவும் கிடைக்காது. அவர் சிறைச்சாலைக்கு வெளியே நடக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழிப்பறை வசதிகளை அவர் கோரியிருந்த நிலையில், வழக்கமான பயன்பாடே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது கண்ணாடி மற்றும் மருந்துகளை சிறைக்கு கொண்டு சென்றுள்ளார். சிதம்பரம், இரவில் லேசான உணவும் மருந்துகளும் சாப்பிட்டுள்ளார்.

சிதம்பரத்திற்கு கிடைக்கும் வசதிகளில் ஊடகங்களுக்கான அணுகலும் உள்ளது. மற்ற கைதிகளைப் போலவே, முன்னாள் அமைச்சருக்கும் சிறைச்சாலை நூலகத்தை அணுக முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொலைக்காட்சியைப் பார்க்க முடியும். அவர் தனது கலத்தில் செய்தித் தாள்களையும் பெறுவார்அவருக்கு தலையணை மற்றும் போர்வை வழங்கப்பட்டுள்ளது.