Home One Line P1 மலாக்கா: 20 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களை மாற்றுவதற்கு 5 மில்லியன் செலவிடப்படும்!

மலாக்கா: 20 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களை மாற்றுவதற்கு 5 மில்லியன் செலவிடப்படும்!

737
0
SHARE
Ad

மலாக்கா: மலாக்கா மாநிலத்தில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளின் பழைய வாகனங்களை மாற்றி, புதிய 45 வாகனங்களை வாங்குவதற்கு  மாநில அரசு 5 மில்லியன் ரிங்கிட் செலவழிக்க உள்ளதாக முதலமைச்சர் அட்லி சஹாரி கூறினார்.

20 வயதுக்கு மேற்பட்ட வாகனங்கள் முக்கியமாக மாற்றப்படும் என்றும், முப்தி துறை, இஸ்லாமிய மதத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் நலத்துறை ஆகிய துறைகளில் உள்ள வாகனங்களே பெரும்பாலும் இதில் அடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.

இது  முதல் கட்டமாகும், இதற்கு அடுத்து 10 ஆண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மாற்றப்பட வேண்டிய வாகனங்களில் கூண்டுந்துகள் மற்றும் புரோட்டான் எக்ஸோரா, மிட்சுபிஷி போன்ற கார்கள் அடங்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.